செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By VM
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (17:07 IST)

ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர் செஞ்சகாரியம்! சிகிச்சைக்கு வந்த பெண் அதிர்ச்சி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் பாலியல் அத்துமீறலில்  ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.


 
புதுச்சேரி பங்கூர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், ஜிப்மர் மருத்துவனைக்கு குடல் இறக்கம் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார்.
 
அப்போது பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனையின் போது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  அப்பெண்  உறவினர்களிடம் புகார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவமனை பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மருத்துவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தரப்பில் இச்சம்பத்தில் உண்மையில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.