1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (12:34 IST)

நர்சின் உல்லாச மோகம்: கழற்றிவிட்ட டாக்டர்; கடைசியில் நடந்த களோபரம்

நர்சின் உல்லாச மோகம்: கழற்றிவிட்ட டாக்டர்; கடைசியில் நடந்த களோபரம்
ஆந்திராவில் நர்ஸ் ஒருவர் தனது கள்ளக்காதலனான டாக்டர் ஒருவர் மீது ஆசிட் வீச முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதர்ஷ். மருத்துவரான இவர் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். ஆதர்ஷுக்கு அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் அருணகுமாரியுடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. அருணகுமாரிக்கு திருமணம் ஆகியிருந்த போதிலும், அவர் மருத்துவருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் ஆதர்ஷ் அருணகுமாரியுடனான உறவை திடீரென முறித்துக்கொண்டதாக தெரிகிறது. இதனால் அருணகுமாரி ஆதர்ஷ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். ஆதர்ஷை பழிவாங்க திட்டமிட்ட அருணகுமாரி, அவர் மீது ஆசிட்டை வீசினார். இதில் ஆதர்ஷ் அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிட்டார்.
நர்சின் உல்லாச மோகம்: கழற்றிவிட்ட டாக்டர்; கடைசியில் நடந்த களோபரம்
 
இதையடுத்து புகாரின்பேரில் போலீஸார் அருணகுமாரியை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.