புற்று நோயாளிகளுடன் தகாத உறவு: பெண் மருத்துவர் கைது

doctor
Last Modified வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (18:31 IST)
கனடாவில் புற்று நோயாளிகளுடன் பெண் மருத்துவர் அத்துமீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த மருத்துவரான தீபா தனியார் மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் அங்கு வரும் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
 
இந்நிலையில் தீபா மது அருந்திவிட்டு மருத்துவமனைக்கு வந்து புற்று நோயாளிகளிடம் தவறாக பேசியுள்ளார். அவர்களுடன் ஒரே படுக்கையில் உறங்கி அவர்களிடம் அத்து மீறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் இது குறித்து புகார் அளித்தார்.
 
இந்த சம்பவம் நடைபெற்று 3 வருடங்கள் ஆகிவிட்டது. போலீஸார் விசாரணை நடத்தியதில் தீபா நோயாளிகளிடம் அத்துமீறியது உண்மை என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரின் உரிமத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :