செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஜூலை 2021 (22:08 IST)

கோழிக் கழிவில் இருந்து டீசல்... இளைஞர் சாதனை

கோழிக் கழிவுகளில் இருந்து டீசல் உற்பத்தில் செய்து கேரள மாநில இளைஞர் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சியில்  பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களில் ரூ.100 க்கு விற்கப்பட்ட இந்தப் பெட்ரோல் விலை இந்த வாரம் ரூ.103க்கு விற்கப்படுகிறது. டீசலும் அதேபோல் விலை உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாசியப் பொருட்களில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஜான் ஆபிரகாம், சுமார் 7 ஆண்டுகாலம் தொடர்ந்து முயற்சி செய்து, கோழி கழிவுகளில் இருந்து பயோடீசல் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு அவர் காப்புரிமையும் பெற்றுள்ளார். மேலும், இந்த டீசலை குறைந்த விலையில் விற்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.