அம்ராபாலி ரியல் எஸ்டேட் மோசடி – தோனிக்கு மேலும் சிக்கல் !
அம்ராபாலி ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் அதன் விளம்பரத் தூதரான தோனியையும் வழக்கில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அம்ராபாலி எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்பட்டுவந்தார். இந்த நிறுவனத்தில் சுமார் 42000 பேர் 2600 கோடி ரூபாய் முதலீடு செய்து தங்களது வீடுகளுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கான வீடுகளை கட்டிக்கொடுக்காமல் அந்நிறுவனம் இழுத்தடித்து வந்தது.
இதனால் பணம் கொடுத்த சிலர் அளித்த புகாரின் பேரில் முதன்மை இயக்குனர் மற்றும் சில இயக்குனர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் தோனி இதன் விளம்பரத் தூதராக நடித்ததால் அவரையும் இந்த மோசடியில் முக்கிய நபராக சேர்க்கவேண்டும் என நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முன்னதாக தனக்குத் தரவேண்டிய பணத்தை கொடுக்கவில்லை என புகாரளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.