வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (23:00 IST)

திருப்பதி தேவஸ்தான கோயில் ஊழியருக்கு கொரோனா !

ஆந்திர மாநிலம் திருப்பதில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி கோயில் கொரொனா ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பக்தர்களுகாக சோதனை முறையில் திறக்கப்பட்டு சாமி தரிசனத்திற்காக பக்தர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்கப்பட்டது.

இந்நிலையில், திருப்பதியில் செயல்பட்டு வரும் கோயிந்தராஜ சாமி கோயிலில் பணியாற்றி வரும் தேவஸ்தான ஊழியருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டதால் நடை அடைக்கப்பட்டது.

எனவே கோயில் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் பணிகள் முழுமையாக நடைபெற்ற பின்னர் வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று நடை திறக்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.