திங்கள், 13 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (20:35 IST)

உலக நாடுகளுக்கு பரவும் டெல்டா வகை கொரொனா

உலகில் மேலும் சில பகுதிகளுக்கு டெல்டா வகை வைரஸ் பரவவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு கொரொனா வைரஸ் முதன் முதலாகப் பரவியது.

இங்கிருந்து இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்திற்கு வந்த  மாணவிக்கு முதன் முதலில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இத்தொற்றில் இருந்து குணமடைந்தார்.

தற்போது, இந்தியாவில் உருமாறிய கொரொனா இரண்டால் அலை பரவிவருகிறது. கோவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் முதன்முதலில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட கேரள மாணவிக்கு மீண்டும் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொரொனா பாதித்தவர்களுக்கு மீண்டும் கொரொனா பரவுன் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்போது  சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவும் என ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.