வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:46 IST)

லத்தி இல்ல... ஆனா கண்ட இடத்துல பயங்கரமா அடிச்சாங்க: மாணவி வேதனை!

Jamia Protest

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸார் மாணவ மாணவிகளை காட்டுமிராண்டிதனமாக அடித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நாடுமுழுக்க நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைகழகத்தில் போராட்டங்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற போராட்டத்தின் போது போலீஸார் மாணவர்கள் மீது கடுமையான தடியடி நடத்தியுள்ளனர். 
 
இதில் காயமடைந்து 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவி பேட்டியளித்த போது கூறியதாவது, போலீஸார் லத்தி ஏதும் பயன்படுத்தவில்லை. ஆனால், கடுமையாகத் தாக்கினார். இடுப்புக்கு கீழ் பாகங்களில் தாக்கினார்கள். 
 
சிறிது நேரத்தில் யாரும் மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நேரத்தை பயன்படுத்தி காவலர்கள் இன்னும் கடுமையாகத் தாக்கினர். தொடைகளில், மார்பு, மர்ம உறுப்பு என பாரபட்சமின்றி தாக்கினர் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.