புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 பிப்ரவரி 2020 (07:49 IST)

டெல்லி மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: பரபரப்பு தகவல்

டெல்லியில் கடந்த சில நாட்களாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வருவது தெரிந்தது. இந்த நிலையில் ஏற்கனவே மாணவர்கள் மீது இரண்டு முறை துப்பாக்கி சூடு மற்றும் பலமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
 
நேற்று நள்ளிரவில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தின் கேட் அருகில் நின்று 2 மர்ம நபர்கள் மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கி சூட்டில் மாணவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இருப்பினும் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏ என்ற சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்குதல் இது தொடர்கதையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது