வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (12:17 IST)

சுமார் 9,000... கொரோனா மினிமம் டார்கெட்டே இவ்வளவா?

இந்தியாவில் எப்படியும் 9,000 பேரை கொரோனா தாக்கும் என சில கணக்கீடுகள் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால், இந்தியாவில் தற்போது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் வந்துள்ளது. 
 
டெல்லியில் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து உள்ளது. 
 
இந்த மாநாட்டில் சுமார் 7600 இந்தியர்கள் மற்றும் 1300 வெளிநாட்டினர் கலந்துகொண்டதாகவும் தற்போது இந்த நிகழ்வு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மிகப்பெரிய இடமாக உருவெடுத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட அனைவரையும் தேடி வருவதாகவும், இவர்கள் தாமாகவே முன்வந்து கொரோனா சோதனை செய்துக்கொள்வது நல்லது எனவும் கூறப்பட்டு வருகின்றது. அப்படி இவர்கள் முறையாக சோதனை செய்துக்கொள்ளாவிட்டால் 9,000 பேர் வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.