செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (11:35 IST)

வளர்ப்பு நாய் குரைத்ததால் ஆத்திரம்; நாயையும், உரிமையாளரையும் தாக்கிய நபர்!

Dog
டெல்லியில் பக்கத்து வீட்டுக்காரரின் நாய் குரைத்ததால் ஆத்திரமடைந்த நபர் நாயையும், உரிமையாளரையும் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பஸ்சிம் விகார் பகுதியை சேர்ந்த ரக்சித் என்ற நபர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் இந்த நாய் ரக்சித் வீட்டிற்கு பக்கத்தில் வசிக்கும் அண்டை வீட்டு ஆசாமியை பார்த்து குரைத்துள்ளது. இதனால் பயந்து போன அவர் நாய் குறித்து ரக்சித்திடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு சமயத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவர் இரும்பு கம்பியால் ரக்சித்தை தாக்கியுள்ளார். அதோடு அந்த வளர்ப்பு நாயையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து ரக்சித் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.