கடனுக்கு ஸ்வீட் கேட்டதால் சண்டை; கஸ்டமர்கள் மீது ஆசிட் வீசிய ஆசாமி!
ஜார்காண்ட் மாநிலத்தில் ஸ்வீட் கடை ஒன்றில் கடனுக்கு ஸ்வீட் தர மறுத்ததால் ஆசாமி ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஹரிபூர் கிராமத்தில் ஒருவர் ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளார். அந்த கடைக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடனுக்கு ஸ்வீட் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து ஸ்வீட் கடை உரிமையாளருக்கும், அந்த நபருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.
அதை தொடர்ந்து வீட்டிற்கு சென்று ஆசிட் எடுத்து வந்து அந்த நபர் ஸ்வீட் கடை மீது எறிந்துள்ளார். இதனால் ஸ்வீட் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 7 பேர் மீது ஆசிட் தெறித்து அலறியுள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் கடன் கேட்ட ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.