செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (15:38 IST)

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி இருந்து பெண் சாதனை !

அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், சுமார் 288 நாட்கள் தங்கி இருந்தவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
பூமிக்கு மேல் விண்வெளில் 13 நாடுகள் இணைந்து, சர்வதேச ஆய்வு மையத்தை அமைத்துள்ளன.  இதில், தங்கி இருந்து அவ்வப்போது, விண்வெளி வீரர்கள் வீராங்கனைகள் ஆய்வு செய்வது வழக்கம்.
 
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்ற அமெரிக்க வீராங்கனை கிறிஸ்டீனா கோச்  விண்வெளியில் 288 நாட்கள் தங்கியிருந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்காக பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.