1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By

கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு விடுமுறை அளிக்காததால் திடீர் மரணம்: மும்பையில் பரபரப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர் ஒருவருக்கு விடுமுறை அளிக்காததால் அந்த ஊழியர் மரணம் அடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஊழியராக பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் தனக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், ஓய்வு எடுக்க விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்
 
ஆனால் அவரது கோரிக்கையை மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து பணி செய்யும்படி வற்புறுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதியிலிருந்து அவருக்கு காய்ச்சல் அதிகமானதாகவும் இருப்பினும் அவர் மருத்துவ நிறுவனத்தின் கட்டாயத்தின் பேரில் 24ஆம் தேதி வரை பணியில் இருந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் அவரது உடல் மோசமானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அதன்பின்னர் அவர் சிகிச்சையின் பலனின்றி மரணமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த மருத்துவ ஊழியருக்கு முன்கூட்டியே விடுமுறை அளித்து தகுந்த சிகிச்சை அளித்து இருந்தால் அவரது உயிர் பலியாகி இருக்காது என்று சக ஊழியர்கள் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்