வெள்ளத்தில் மிதக்கும் டெல்லி… ஆரஞ்சு எச்சரிக்கை!
தலைநகர் டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் சாலைகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
டெல்லியில் நேற்றிலிருந்து கனமழைக் கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு மட்டும் 13 செமீ மழை பெய்துள்ளது. இதனால் சாலைகள் முழுவதும் வெள்ளமாக வாகனங்கள் ஓட்டுவது சிரமமாகியுள்ளது. இதையடுத்து டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.