ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (15:06 IST)

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக உயர்வு..!!

Heat Death
டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. 
 
இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. 

டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுவதால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் 113 டிகிரி முதல் 118 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.


இந்நிலையில் பீகார், ராஜஸ்தான், டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது.