1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:27 IST)

வால்பாறையில் ஒரே நாளில் இந்தியா அளவில் அதிக மழை பொழிவு!

தென்மேற்கு பருவ மழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. 
மழையால் அணைகள் நிரம்பி கேரளா மாநிலமே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை மழைக்கு 167 பேர் பலியாகி இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் மட்டும் இந்தியாவிலேயே அதிகப்படியாக 298 மி.மீ மழை பாதிவாகியுள்ளது. 
 
அதற்கு முந்தைய நாள் 190 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக வால்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.