திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:40 IST)

நடிகர்கள் விஜய் சேதுபதி , தனுஷ் கேரளாவுக்கு நிதியுதவி அளிப்பு

கேரள மாநிலத்தில் கனமழையால் இயல்பு நிலை முடங்கியுள்ளது.  இந்த இயற்கை சீற்றத்துக்கு கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
இதனிடையே கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில்  நடிகர் விஜய் சேதுபதி தனது பங்குக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் அறிவித்துள்ளார்.
 
முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா - கார்த்தி ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். விஷால் மற்றும் சித்தார்த் ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது.