திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (14:27 IST)

பயங்கரவாதிகளுக்கு உதவ 12 லட்சம் வாங்கினேன் – டிஎஸ்பி வாக்குமூலம்

பயங்கரவாதிகளை ஜம்மு காஷ்மீர் வழியாக அழைத்து வர 12 லட்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட டிஎஸ்பி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதாக மாவட்ட எஸ்பிக்கு உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. அதை தொடர்ந்து போலீஸர தீவ்இர சோதனையில் ஈடுபட்டபோது ஸ்ரீநகர் விமான நிலைய கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி டாபிந்தர் சிங் வாகனம் வந்துள்ளது. அதில் அவர் இரண்டு பயங்கரவாதிகளையும் மறைத்து அழைத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்ததுடன் டாபிந்தர் சிங் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அழைத்து வர 12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த தாவிந்தர் சிங்தான் கடந்த வாரம் ஸ்ரீநகருக்கு பயணம் செய்த 15 நாட்டு தூதர்களுக்கு பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டார். எனவே இவர் இந்தியா குறித்த பல தகவல்களை பயங்கரவாதிகளுக்கு அளித்திருக்கலாம் என்றரீதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.