செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜனவரி 2020 (13:01 IST)

தேஜஸ் ரயிலில் கெட்டுப்போன உணவு – ஐஆர்சிடிசி நடவடிக்கை!

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கெட்டுப்போன உணவை அளித்ததாக பயணிகள் அளித்த புகாரின் பேரில் ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு கோவாவிலிருந்து மும்பைக்கு செல்லும் தேஜஸ் ரயிலில் பயணிகளுக்கு உணவாக சப்பாத்தியும், புலாவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கெட்ட வாடை வீசியதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். அதை சாப்பிட்ட சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பயணிகள் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல சதாப்தி ரயிலிலும் கெட்டுப்போன உணவை அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில் ஐஆர்சிடிசி அதை மறுத்துள்ளது.