1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. daughters watched father final ceremoney in video call

இறந்த தந்தை!.. வீடியோ காலில் இறுதி சடங்கை பார்த்த மகள்!.. காலம் கெட்டுப்போச்சி!...

video call
இந்தியர்களிடம் கூட முன்பிருந்தது போல பாசம், சென்டிமென்ட் இதுவெல்லாம் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு திரைப்படத்தில்  ‘பாசம் கண்ணீரு பழைய கதை.. தாயே செத்தாலும் அழுவதில்லை’ என்கிற பாடல் வரி வரும். அது உண்மைதான் என நிரூபிப்பது போன்ற சம்பவங்கள் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது
.
தன்னை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய தந்தையே விட்டுவிட்டு மகன்கள் வெளிநாட்டில் வாசிப்பதும் தந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாமல் முதியோர் இல்லத்தில் விடுவதும் பல இடங்களில் நடக்கிறது. ஆண்கள்தான் இப்படி என்றால் பெண்களுக்கு கூட தற்போது பாசம், சென்டிமென்ட் இல்லாமல் மாறி வருகிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சிவசரண் ராம்ரதன் குப்தா. இவருக்கு வயது 74. சிவசரண் துணி வியாபாரம் செய்து தனது மூன்று மகள்களையும் நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துவிட்டார். ஒரு மகள் நேபாளத்திலும், ஒருமகள் ஹரியானாவிலும், ஒருவர் மும்பையிலும் வசிக்கிறார்கள். தாய் இறந்துவிட தந்தையை பார்த்துக்கொள்ள முடியாததால் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டனர்.

இந்நிலையில்தான், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவசரண் காலமனார். இது குறித்து முதியோர் இல்ல நிர்வாகிகள் அவரின் மகள்களுக்கு தகவல் தெரிந்தனர். வேலை காரணமாக தங்களால் நேரில் கலந்து கொள்ள முடியாது எனக்கூறிய அவர்கள் Google Pay மூலம் ரூ.5100 பணத்தை அனுப்பி இறுதி சடங்கு செய்யுமாறு கூறியிருக்கிறார்கள். எனவே முதியோர் இல்ல நிர்வாகமே அவரின் உடலுக்கு இறுதி சடங்கை செய்திருக்கிறது.

அவரின் உடல் தீமூட்டப்படும்போது அவரின் மூன்று மகள்களும் வீடியோ கால் வழியாக அதை பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை, வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகவே அந்த பெண்களை நெட்டிசன்கள் திட்டி வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மது அருந்தும்போது தகராறு!.. இளைஞரை கொன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நண்பர்கள்!...