1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2018 (13:05 IST)

தாத்தா பாட்டி சொன்ன கதைகளில் இல்லை.... டார்வின் தத்துவம் தவறு; மத்திய அமைச்சர்

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் டார்வின் தத்துவம் தவறு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார்.

 
மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத் நகரில் அகில இந்திய வேதிக் சம்மேளன மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் கூறியதாவது:-
 
குரங்கில் இருந்து மனிதன் தோன்றவில்லை. அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இதுதொடர்பான ராட்வின் கோட்பாடு தவறு என்று கூறியுள்ளார்.
 
பின் செய்தியாளர்களிடம் பேசியவர்:-
 
குரங்கில் மனிதன் வந்ததை நமது மூதாதையர்கள் கண்டதாகக் கூறவில்லை. பண்டையகால இலக்கியம். வரலாறு, கதைகள் உள்பட எதிலும் அத்தகைய கருத்தை நமது முன்னோர்கள் கூறவில்லை. தாத்தா, பாட்டி சொன்ன கதைகளில் கூட அவ்வாறு யாரும் குறிப்பிடவில்லை என்பதால் அதை பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
இவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் இவரை கேலி செய்து வருகின்றனர்.