8மணி நேரம் பிணவறையில் உயிருடன்........ பிரேத பரிசோதனையில் திடுக் தகவல்
இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெல் ஊழியர் பிணவறையில் 8 மணி நேரம் உயிருடன் இருந்து இறந்தது பிரதே பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஹரித்துவாரின் பெல் மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இறந்து விட்டதாக இரவு 11.30 மணியளவில் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் காலை 8 மணி அளவில் உயிரிழந்தது தெரியவந்தது. இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின் சுமார் 8 மணி நேரம் பிணவறையில் உயிருடன் இருந்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த தலைமை மருத்துவ அதிகாரி அசோக் கெய்ரோலா தலைமையில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழு ஆய்வு செய்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது.