வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (08:25 IST)

மர்ம நோய்க்கு 570 பாதிப்பு: ஜெகன் மோகன் ரெட்டி நேரடி விசிட்!

ஆந்திராவில் நேற்று காலை வரை 570 பேர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏலூர் என்ற பகுதியில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திடீர் திடீரென வாந்தி மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில், நேற்று காலை வரை 570 பேர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 264 பேர் ஆண்கள், 235 பேர் பெண்கள் மற்றும் 71 பேர் குழந்தைகள். சிகிச்சைக்கு பின் 332 பேர் குணமடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் திடீர் திடீரென வாந்தி மயக்கம் ஏற்படுவது ஏன் என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்ததில் பாதித்தவர்களின் உடலில் லீட் மற்றும் நிக்கல் டாக்சிஸ்  என்னும் நச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த நச்சு எவ்வாறு கலந்தது என்று தெரியவில்லை.
 
மேலும், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஆலநானி மற்றும் முதல்வர் ஜெகன்மோகன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.