மீண்டும் கியூட் (CUET) தேர்வுகள் எப்போது..? – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
நாடு முழுவதும் மத்திய பல்கலைகழகத்தில் சேர்வதற்கான கியூட் தேர்வு மீண்டும் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைகழங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பொதுநுழைவு தேர்வு நடந்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டிற்கான கியூட் நுழைவுத்தேர்வு கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. காலை, மாலை 2 ஷிப்ட்டுகளாக தேர்வுகள் நடக்க இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறால் 17 மாநிலங்களில் சில மையங்களில் முதல் ஷிப்ட் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
மாலை ஷிப்ட் தேர்விலும் 489 மையங்களில் தொழில்நுட்ப கோளாறால் தேர்வு நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினமும் சில பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வுகள் ரத்தாகின. இதனால் மாணவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள தேசிய தேர்வு முகமை, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கோளாறுகளால் தேர்வு ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் ஆகஸ்டு 24 முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தேர்வுக்கு சில நாட்கள் முன்னதாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.