ஜார்க்கண்ட் மாநிலத்தில் 41 எம்.எல்.ஏக்கள் பேர் மீது கிரிமினல் வழக்கு: அதிர்ச்சி தகவல்!
சமீபத்தில் நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இம்மாநிலத்தில் முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 29ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலது கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 41 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 30 எம் எல் ஏ க்களில் 17 பேர் மீதும் காங்கிரசின், 16 எம் எல் ஏ க்களில், எட்டு பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.
இதேபோல் பாஜகவின், 25 எம் எல் ஏ க்களில், 11பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 55 எம்.எல்.ஏக்கள் மீது குற்றவழக்கு நிலுவையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது