1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (14:09 IST)

முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ஹேமந்த் சோரன்: அகில இந்திய தலைவராகும் திமுக தலைவர்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை அடுத்து வரும் 29ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார் 
 
இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவுக்கு முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
ஏற்கனவே சமீபத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் பதவியேற்ற போதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதும் அவரும் அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அகில இந்திய அளவில் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது