ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:33 IST)

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது!

சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில்  வெள்ளித்தட்டில் 78 வது சுதந்திர தின விழா இந்திய தேசியக் கொடியை வைத்து நடராஜப் பெருமானின் திருவடியில் வைத்து படைக்கப்பட்டு  மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலில் வலம் வந்து 142 அடி உயரம் உள்ள கீழ கோபுரத்தில் கொடியேற்றப்பட்டது.
 
இந்தியாவிலேயே 78 வது சுதந்திர தின தேசிய கொடி சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்செந்தர்கள் தேசிய கொடிக்கு மரியாதை தந்து கீழே கோபுரத்தின் கலசத்தில் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டது என்பது 1947 முதல் இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஏற்றப்படுகிறது.
 
சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.