ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (14:15 IST)

டிரம்புடன் இணைந்து உற்சாக நடனம்.! வீடியோவை பகிர்ந்த எலன் மஸ்க்..!!

Trump Elon
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புடன் இணைந்து நடனமாடும் வீடியோவை, எலன் மஸ்க் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் களத்தில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.    
 
பிரபல உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்டு டிரம்ப்-ஐ அண்மையில் நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேஸில் நடைபெற்றது. இந்த நேர்காணலை உலகம் முழுவதிலும் இருந்து  நேரலையில்  சுமார் 13 லட்சம் பேர் கேட்டனர். 
 
இந்நிலையில், டிரம்புடன் இணைந்து நடனமாடும் வீடியோவை, எலன் மஸ்க் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, 'எங்களை வெறுப்பவர்கள் ஏ.ஐ. என சொல்லக்கூடும்' என பதிவிட்டுள்ளார்.  கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் 'ஸ்டேயிங் அலைவ்' என்ற பாடலுக்கு எலன் மஸ்கும், டிரம்பும் நடனம் ஆடும் காட்சியை அவர் வெளியிட்டுள்ளார்.


இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.