1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (22:03 IST)

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த கிரிக்கெட் மைதானம் கேட்டு கடிதம் !

சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்காவும் மாநில நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளித்து வருகிறது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தை கொரோனா பாதித்தபர்களை தனிமைப்படுத்த தற்காலிகமாகப் அளிக்குமாறு மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகிறது