வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 மே 2020 (17:31 IST)

சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளன செயலாளர்: என்ன விஷயம்??

இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.  
 
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திடீரென வெளியான அறிவிப்பால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு கட்ட ஊரடங்குகளாக பணிபுரியும் இடத்திலேயே சிக்கி கொண்டிருந்த ஊழியர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
ஆனால் ரயில்களை பாயிண்ட் டூ பாயிண்டாக இயக்கவும், முன்பதிவு முறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரயில்வே அமைச்சகம் பிரதமரின் கொரோனா நிதிக்கு ரூ.151 கோடி நிதியளிக்கிறது. ஆனால் ஏழை தொழிலாளர்களுக்கு இலவச சிறப்பு ரயில் சேவை அளிக்க முடியாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ரயில்வே அமைச்சகம் காங்கிரஸின் பேச்சை கேட்கக்கூடாது என்றே செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில் கட்டணங்களை காங்கிரஸ் செலுத்தும் எனவும் கூறியுள்ளார்.
 
இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 85 சதவீத பயணக் கட்டணத்தை ரயில்வே அமைச்சகம் ஏற்கும். 
 
மீதமுள்ள 15 சதவீதக் கட்டணத்தை மாநில அரசுகள் ஏற்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘கொரோனா தொற்று காலத்தில் பயணம் செய்வது என்பது ஆபத்தான ஒன்று. ஆனால், ரயில்வே ஊழியர்கள் அவர்களுடைய கடினமான உழைப்பின் மூலம் அதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.
 
அற்ப அரசியல்லாபங்களுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களின் மூலம் வீடு திரும்புவதை குலைத்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.