திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (12:15 IST)

நிதி முறைகேடு செய்த வழக்கு: கருவூல அதிகாரிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறைத்தண்டனை..!

நிதி முறைகேடு செய்த கருவூல அதிகாரிக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1987 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் அரசு கருவூல அதிகாரியாக அனுமந்தராய் என்பவர் பணிபுரிந்து வந்து நிலையில் அவர் நிதி முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அனுமந்தராய்க்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த நிலையில் இன்று தண்டனையை எதிர்த்து அனுமந்தராய் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய வயது 80 என்பதை கணக்கில் கொண்டு அவருக்கு ஒரே ஒரு நாள் மட்டும் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Edited by Mahendran