1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Director lingusamy sentence was confirmed by court

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை… உறுதி செய்த முதன்மை நீதிமன்றம்!

லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமி 2014 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாக இருந்த ‘எண்ணி ஏழே நாள்’ என்ற படத்துக்காக பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றார்.

ஆனால் அந்த படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான பிவிபி தொடர்ந்த தங்கள் பணத்தைக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதற்காக லிங்குசாமி கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளன. இதையடுத்து செக் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பில் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என்ற தீர்ப்பு தமிழ் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தனடனையை எதிர்த்து லிங்குசாமி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மேலும் தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாக  “ஊடகங்களில் பரபரப்பாக வரும் என்னை பற்றிய ஒரு செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அபளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் சைதாப்பேட்டை கோர்ட் வழங்கிய தீர்ப்பை சென்னை முதன்மை நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதனால் விரைவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. இந்த தீர்ப்பானது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
குண்டு வெடிப்புக் காட்சியை படமாக்கிய போது சஞ்சய் தத் காயம்… மருத்துவமனையில் அனுமதி!