திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (19:26 IST)

கொரோனா : மும்பையில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

சீனாவில் இருந்து இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தொற்று தீவிரமாகி வருகிறது. இதைத் தடுக்க  இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இதை நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில்  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,761ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில்
 இன்று மும்பையில் ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும்  218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 993 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்து, இதுவரை
பலி யானோர் எண்ணிக்கை  64 ஆக உயர்ந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.