1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 6 ஜூன் 2020 (10:37 IST)

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் பல மாநிலங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26,770லிருந்து 2,36,657 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,348லிருந்து 6,642 ஆகவும், அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462லிருந்து 1,14,073 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 7வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.