1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (09:41 IST)

இந்தியாவில் இதுவரை 10.85 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி !

இந்தியாவில் இதுவரை 10.85 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக 1 லட்சத்திற்கு மேல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,36,89,453 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 10.85 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 40.04 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 38.81 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.