ஆதார் ஃபார்முலாவில் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசின் புதிய திட்டம்!
கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுபவர்களுக்கு ஆதார் பார்முலாவை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
தற்போது வைரஸ் தடுப்பூசி போட வருபவர்களுக்கு கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கைரேகை பதிவு செய்யும்போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது என்பதால் ஆதார் எண் பார்முலாவை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
இந்தத் திட்டத்தின்படி தடுப்பூசி போட வருவதற்குமுன் கோ-வின் என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தங்களுடைய செல்போன் எண் மற்றும் ஆதார் எண்ணை அந்த செயலியில் பதிவு செய்தால் தடுப்பூசி மையத்துக்கு செல்லும்போது ஆதார் தகவல்கள் மூலம் அவருடைய தகவல்கள் தானாகவே சரிபார்க்கப்பட்டு பின்னர் தடுப்பு ஊசி செலுத்தப்படும்
இதன் மூலம் கருவிழி மற்றும் கைரேகைகளை பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா பரவாது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது