விஷால் பட நடிகைக்கு கொரோனா தொற்று...ரசிகர்கள் அதிர்ச்சி

Sinoj| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (23:07 IST)

விஷால் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவில் இந்த்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், விஷால் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலையாள சினிமா நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் விஷாலின் ஆக்சன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
இவர் தற்போது தனுஷின் ஜகமே மந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரிலிஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.



இதில் மேலும் படிக்கவும் :