ஜெட் வேகத்தில் கொரோனா... பரிசோதனை ஆய்வகம் 2,000 ஆக அதிகரிப்பு !
இந்தியாவில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகம் 2,000 ஆக அதிகரிப்பு என அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே ஒரு நாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கொரோனா பரிசோதனை ஆய்வகம் 2,000 ஆக அதிகரிப்பு என அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.