1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

10 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை! – கொரோனாவின் பிடியில் இந்தியா!

India
இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,352 லிருந்து 10,363 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 324 லிருந்து 349 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 980 லிருந்து 1,036 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1510 பேரும், தமிழகத்தில் 1173 பேரும், ராஜஸ்தானில் 873 பேரும், தெலுங்கானாவில் 562 பேரும், மத்திய பிரதேசத்தில் 604 பேரும், ஆந்திராவில் 516 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
கொரோனா எதிரொலி: கூகுள் பே வழங்கும் பயனுள்ள புதிய வசதி