1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona India cases state wise

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு! மாநிலவாரி பட்டியல்!

Corona
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 169 லிருந்து 199 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 478 லிருந்து 504 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 834 பேரும், டெல்லியில் 720 பேரும், ராஜஸ்தானில் 463 பேரும், தெலுங்கானாவில் 440 பேரும், கேரளாவில் 357 பேரும், ஆந்திராவில் 348 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கொரோனா வார்டில் திடீரென பலியான 5 பூனைகள்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்