1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

மீண்டும் 40 ஆயிரத்திக்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

India
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் சில நாட்களுக்கு பிறகு மீண்டும் 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,08,74,376 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 724 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,08,764 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,00,14,713 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,50,899 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பு? – மீண்டும் களமிறங்கும் ரஜினி?