1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

இந்தியாவில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா! – இந்திய நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் மீண்டும் 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 41,506 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,08,37,222 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,08,040 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,99,75,064 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,54,118 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம்!