இந்தியா- இலங்கை தொடர்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை!

india vs srilanka
இந்தியா- இலங்கை தொடர்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை!
siva| Last Updated: ஞாயிறு, 11 ஜூலை 2021 (08:51 IST)
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் சமீபத்தில் இந்திய அணி இலங்கை சென்று பயிற்சியில் விளையாடி வருகிறது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ஜூலை 13-ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்கும் என்று திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென ஜூலை 18-ஆம் தேதிக்கு போட்டி மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் உள்ள ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய அட்டவணை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி தொடர்:

ஜூலை 18: முதல் ஒருநாள் போட்டி

ஜூலை 20: 2வது ஒருநாள் போட்டி


ஜூலை 23: 3வது ஒருநாள் போட்டி

இந்தியா - இலங்கை டி20 போட்டி தொடர்:
ஜூலை 25: முதல் டி20 போட்டி

ஜூலை 27: 2வது டி20 போட்டி

ஜூலை 29: 3வது டி20 போட்டி

இதில் மேலும் படிக்கவும் :