1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:04 IST)

அமெரிக்கா, பிரேசிலில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில் ஆகிய இரண்டு நாடுகளும் முதல் இரண்டு இடத்தில் இருந்தாலும் படிப்படியாக இந்த இரு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
 
அமெரிக்காவில் நேற்று 36,811 பேருக்கு கொரோனா மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை அந்நாட்டில் 55.66 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இந்நாட்டில் தினமும் 50ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 522 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.73 லட்சமாக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது
 
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 22,365  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அந்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33.40 லட்சமாக அதிகரிப்பு என்பதும், கொரோனா தொற்றால் நேற்று மட்டும் மேலும் 582 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.07 லட்சமாக உயர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும், குணமடைந்தோர் எண்னிக்கை 1.45 கோடியாக அதிகரித்துள்ளது என்பதும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7.72 லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது