செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (17:09 IST)

ஒரே குழியில மொத்தமாக வீசப்படும் கொரோனா சடலங்கள் – அதிர்ச்சி வீடியோ

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டது. நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாரத பிரதமர் மோடி,  மக்கள் மழைக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்..

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை  ஒரு குழி தோண்டி மொத்தமாக வீசியெறியும் காட்சிகள் வெளியாகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அரசு கொரொனாவால் உயிரிழந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதைக் பொருட்டாக மதிக்காமல், ஒரு குழியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் வீசுகின்றனர்.

இந்த வீடியோவை முன்னாள் அமைச்சர்..சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
.