1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2020 (17:57 IST)

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா உறுதி

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே. எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் இதனை உறுதி செய்தார் 
 
ஆனால் அமைச்சர் அன்பழகன் தரப்பில் இருந்து இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு வெறும் காய்ச்சல் மட்டும்தான் என்றும் அவருக்கு கொரனோ தொற்று இல்லை என்றும் அவர் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது. இந்த மருத்துவமனை சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் ’உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் சோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் அன்பழகன் அவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் அறிவித்துள்ளது 
 
மியாட் மருத்துவமனையின் இந்த அறிவிப்பு காரணமாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்கள் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது