1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

அமாவாசை தினத்தில் வழிபாட்டுக்கு பின் காக்கைகளுக்கு உணவு வைப்பது ஏன் தெரியுமா...?

அமாவாசை தினத்தில் படையலிட்டு வணங்கிய பின் காக்கைகளுக்கு உணவு வைக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுது. இப்படி உணவிடுவதன்மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர்  என்பது ஐதீகம்.

எமனும், சனியும் சகோதரர்கள் ஆவார்கள். அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள். அமாவாசை தினத்தன்று  காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய  அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 
 
காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப் பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும். 
 
யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும், நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின்முன் பலமுறை குரல் கொடுக்கும். காலையில் நாம் எழும்முன்னரே காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால்  நல்ல பலன் உண்டு. வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும். காகம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் நமக்கு முன்கூட்டியே  சில செயல்களை உணர்த்துகிறது.