செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (12:37 IST)

கொரோனா சீக்கிரத்தில் நம்மை விட்டு போகாது! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா குறுகிய கால நோயாக இல்லாமல் நீண்ட காலத்திற்கு மனிதர்களிடையே இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களில் வேகமாக உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டுள்ளது கொரோனா வைரஸ். இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி, மருந்து உள்ளிட்டவற்றை கண்டறியும் நோக்கில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் முற்றிலுமாக அழிந்து விட கூடியது அல்ல என்றும் அது நீண்டநாள் பருவகால வைரஸ் தொற்றாக மாற்றமடைய கூடுமென அமெரிக்காவின் தொற்று நோய் கழக இயக்குனர் அந்தோணி பவுசி உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது இதே கருத்தை சீனாவின் நோய் கிருமி ஆய்வியலாளர் ஜின் கி தெரிவித்துள்ளார்.  இவர்களது இந்த கூற்றை குஜராத் இந்திய பொது சுகாதார கழகத்தின் இயக்குனர் திலீப் மாலவான்கர் ஆமோதித்துள்ளார்.

”எந்த வித அறிகுறிகளும் காட்டாமல் வேகமாக பரவும் திறன் உள்ளதால் கொரோனா மக்களிடையே நீண்ட காலம் நீடிக்க வாய்ப்புள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.