1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (20:36 IST)

வாட்ஸ் அப் மூலம் தடுப்பூசி சான்றிதழ்: மத்திய அமைச்சர் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இனி வாட்ஸ் அப் மூலம் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஆன்லைன் மூலமும் நேரிலும் ஒரு தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட உடனேயே வாட்ஸ் அப் மூலம் தடுப்பூசி சான்றிதழ் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
கோவிட் சர்டிபிகேட் என டைப் செய்து 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் அனுப்பினால் சம்பந்தப்பட்ட நபருக்கு ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்தால் உடனடியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது